/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை சிறுவன் - சிறுமி சாதனை
/
மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை சிறுவன் - சிறுமி சாதனை
மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை சிறுவன் - சிறுமி சாதனை
மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை சிறுவன் - சிறுமி சாதனை
ADDED : டிச 05, 2024 12:21 AM

சென்னை,
மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த சிறுவர் அபினந்த், சிறுமி அனன்யா ஆகியோர், தலா மூன்று பிரிவுகளில் 'சாம்பியன்' பட்டங்களை வென்று சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, ஐ.சி.எப்., உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், மூன்று பிரிவுகளில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த முன்னணி வீரரான 17 வயது சிறுவன் அபினந்த் அசத்தினார்.
இவர், ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் மற்றொரு சென்னை வீரர் தருண் உடன் மோதினார். இதில், அபினந்த், 11 - 7, 15 - 13, 12 -10, 11 - 4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
இவர், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில், அபினந்த், 11 - 6, 11 - 5, 11 - 5, 11 - 7 என்ற கணக்கில் எஸ்.கே.அகாடமி வீரர் மணிகண்டனை தோற்கடித்து, சாம்பின் பட்டத்தை வென்றார்.
17 வயது பிரிவில், பி.பி., அபினந்த், 11 - 7, 11 - 9, 11 - 9 என்ற கணக்கில் மற்றொரு சென்னை வீரர் ஸ்ரீராமை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தார்.
15 வயது பிரிவில், சென்னை அகாஷ், 6 - 11, 11 - 8, 11 -- 8, 11 - 7 என்ற கணக்கில், சென்னை வீரர் ராமகிருஷ்ணனை வீழ்த்தினார்.
13 வயது பிரிவில், சென்னை அஜய் அரவிந்த், 11 - 8, 11 - 6, 10 - 12, 8 - 11, 11 - 4 என்ற கணக்கில், நெய்வேலி சிவகணேஷை வீழத்தினார்.
பெண்கள் பிரிவில், சென்னை அனன்யா, 11 - 6, 10 - 12, 10 - 12, 12 - 10, 11 - 9, 5 - 11, 11 - 5 என்ற கணக்கில் சென்னை வீராங்கனை ஹர்ஷினியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல், அனன்யா, 17 வயது, 15 வயது பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றார்.