/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில வாலிபால் போட்டி 60 அணிகள் பலப்பரீட்சை
/
மாநில வாலிபால் போட்டி 60 அணிகள் பலப்பரீட்சை
ADDED : ஜூலை 01, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் நேற்று துவங்கிய, மாநில சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், 38 பெண்கள் அணிகள் உட்பட 60 அணிகள் பங்கேற்றுள்ளன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், 71வது மாநில சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் நேற்று துவங்கியது.
போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கம் மற்றும் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்கின்றன.
போட்டியில், ஆண்களில் 22 அணிகளும், பெண்களில் 38 என, மொத்தம் 60 அணிகள் பங்கேற்கின்றன. 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' அடிப்படையில், வரும் 6ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.