/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில யூத் வாலிபால்: சென்னை அணிக்கு பரிசு
/
மாநில யூத் வாலிபால்: சென்னை அணிக்கு பரிசு
ADDED : நவ 10, 2024 12:22 AM

சென்னை, வேலுாரில் நடந்த, மாநில அளவிலான யூத் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாவட்ட இருபாலர் அணியின் வீரர், வீராங்கனையர், நேற்று பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம் மற்றும் வேலுார் மாவட்ட வாலிபால் சங்கம் இணைந்து, மாநில அளவிலான யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளை, வேலுாரில் இரு தினங்களுக்கு முன் நடத்தின.
போட்டியில், இருபாலரிலும் சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட மாநில முழுதும் பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், ஆடவருக்கான இறுதிப் போட்டியில், சென்னை மற்றும் விழுப்புரம் அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில், 25 - 23, 24 - 26, 25 - 19, 25 - 17 என்ற கணக்கில், சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது.
அதேபோல், பெண்களுக்கான போட்டியில், சென்னை மாவட்ட அணி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.
மாநில போட்டியில் சாதித்த சென்னை ஆடவர் அணியின் வீரர்களுக்கு ஊக்கதொகையாக தலா 5,000 ரூபாய், வீராங்கனையருக்கு தலா 2,500 ரூபாய் என, மொத்தம் 1.05 லட்சம் ரூபாய் பரிசுகள் நேற்று வழங்கப்பட்டன.
பரிசு தொகையை, சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் தலைவர் அர்ஜூன் துரை, எழும்பூரில் நேற்று வழங்கினர். நிகழ்வில், செயலர் ஸ்ரீகேசவன், துணை செயலர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.