ADDED : பிப் 13, 2026 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விடையூர்: கடம்பத்துார் கொசஸ்தலை ஆற்றில், 12 சுவாமி சிலைகளை கண்டெடுத்த மக்கள், அவற்றை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துாரை அடுத்த விடையூர் பகுதியில், கொசஸ்தலை ஆற்றில் சுவாமி சிலைகள் கிடப்பதாக, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, வருவாய் துறையினர் மற்றும் தாலுகா போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். கிராம மக்கள் உதவியுடன், கொசஸ்தலை ஆற்றில் கிடந்த அம்மன் மற்றும் பல்வேறு சுவாமி சிலைகள் என, 12 சிலைகளையும் எடுத்து, திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் சத்தரை, பிஞ்சிவாக்கம் ஆகிய பகுதி கூவம் ஆற்றில், இது போன்று, 55 சுவாமி சிலைகள் கிடைத்தது.

