/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல அலுவலக வளாகத்தில் தொடரும் ஹெல்மெட் திருட்டு
/
மண்டல அலுவலக வளாகத்தில் தொடரும் ஹெல்மெட் திருட்டு
ADDED : அக் 30, 2024 07:08 PM
வளசரவாக்கம்:வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் நிறுத்தப்படும் டூவீலர்களில் இருந்து ெஹல்மட் திருடப்படுவதால், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் சென்னை மாநகராட்சி 11 வது மண்டலமான, வளசரவாக்கம் மண்டலத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.
இங்கு, பிறப்பு இறப்பு சான்றிதழ், வரி கட்டுவது, கட்டட அனுமதி, மற்றும் வளாகத்தில் செயல்படும் இ சேவை மைத்திற்கு என, தினமும் பலர் வந்து செல்கின்றனர்.
மண்டல அலுவலகத்திற்கு வரும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், தங்கள் டூ வீலர்களை, மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திச் செல்கின்றனர்.
இந்நிலையில், பைக்குகளில் வைத்து செல்லும் ெஹல்மெட் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.