/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு மாநகராட்சி பள்ளியில் 'ஸ்டெம்' கல்வி திட்டம் துவக்கம்
/
அடையாறு மாநகராட்சி பள்ளியில் 'ஸ்டெம்' கல்வி திட்டம் துவக்கம்
அடையாறு மாநகராட்சி பள்ளியில் 'ஸ்டெம்' கல்வி திட்டம் துவக்கம்
அடையாறு மாநகராட்சி பள்ளியில் 'ஸ்டெம்' கல்வி திட்டம் துவக்கம்
ADDED : செப் 02, 2025 01:57 AM
அடையாறு:அடையாறு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 'ஸ்டெம்' என்ற கல்வி திட்டம், நேற்று துவக்கப்பட்டது.
அடையாறு மண்டலம், 173வது வார்டு, காமராஜர் அவென்யூவில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், தன்னார்வ அமைப்பு சார்பில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய, 'ஸ்டெம்' என்ற கல்வி திட்டம், நேற்று துவக்கப்பட்டது.
இத்திட்டத்தை, தென்சென்னை தொகுதி தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் துரைராஜ், கவுன்சிலர் சுபாஷினி மற்றும் ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.