சோதனையில் ரூ.278 கோடி பறிமுதல்: திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை
சோதனையில் ரூ.278 கோடி பறிமுதல்: திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை
ADDED : ஏப் 07, 2026 10:20 PM
சென்னை:'கண்காணிப்பு குழுக்கள் சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட, 278 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் விடுவிக்கப்பட உள்ளன' என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும், கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி, இக்குழுக்களால், 92.7 கோடி ரூபாய் ரொக்கம்; 2.04 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம்; 75.7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள்; 214 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள்; 78.4 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசப் பொருட்கள் என, 462 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மாவட்ட குறைதீர்ப்பு ஆணையம் அல்லது வருமான வரித் துறையிடம், முறையான ஆவணங்கள் சமர்ப்பித்ததை தொடர்ந்து, பொதுமக்களுக்கு எந்தவிதமான அலைகழிப்பு மற்றும் சிரமமம் ஏற்படாதவாறு, பறிமுதல் செய்யப்பட்ட 278 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் இலவச பொருட்கள் குறித்து, கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***
