ADDED : நவ 26, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, நேற்று எண்ணுார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.