தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழைநீர் வடிகால்வாய் பணி அரைகுறை அரும்பாக்கம் ரசா கார்டனில் அவதி

 மழைநீர் வடிகால்வாய் பணி அரைகுறை அரும்பாக்கம் ரசா கார்டனில் அவதி

 மழைநீர் வடிகால்வாய் பணி அரைகுறை அரும்பாக்கம் ரசா கார்டனில் அவதி


UPDATED : ஜன 28, 2026 06:07 AM

ADDED : ஜன 28, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2026 06:07 AM ADDED : ஜன 28, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரும்பாக்கம்: ரசா கார்டன் பகுதியில், அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகளால், லேசான மழை பெய்தாலே சாலைகளில் தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம் பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க, வடிகால்வாய் கட்டப்பட்டது. இதில் சில இடங்களில், வடிகால்வாய் பணிகளை அரைகுறையாக விட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.



குறிப்பாக, எம்.எம்.டி.ஏ., வாட்டர் டேங்க் - ரசா கார்டன் இணைப்பு பகுதியில், வடிகால்வாய் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளதால், மழைநீர் செல்ல வழியின்றி, சாலைகளில் குளம் போல் தேங்கி வருகிறது.

இதனால், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், முதியோர் உள்ளிட்டோர் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இரவு நேரங்களில், தண்ணீர் தேங்கிய பகுதிகள் தெளிவாக தெரியாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.

இதுகுறித்து, அதே பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.பி.எஸ்., அதிகாரி கோபால் மாரிமுத்து கூறியதாவது:

ரசா கார்டன் பகுதியில், லேசான மழை பெய்தாலே சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. தற்போது, அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகளால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணிகளை உடனடியாக முழுமைப்படுத்தி, நீரோட்டம் தடையின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us