/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை வியாபாரிகள் மாற்று இடத்திற்கு எதிர்ப்பு
/
நடைபாதை வியாபாரிகள் மாற்று இடத்திற்கு எதிர்ப்பு
ADDED : செப் 30, 2024 12:15 AM
ராயபுரம், வண்ணாரப்பேட்டை, எம்.சி., ரோடு, ஜி.ஏ., ரோட்டில் சாலையோரம் வியாபாரிகளின் சங்கமான வெற்றி நடைபாதை வியாபாரிகள் சங்க தலைவர் மோகனா, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வண்ணாரப்பேட்டை, எம்.சி., ரோடு, ஜி.ஏ., ரோட்டில் பல ஆண்டுகளாக சாலையோரம் துணி வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது, வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோட்டில், 28 கோடி ரூபாய் மதிப்பீடில், நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதனால், இங்குள்ள சாலையோரம் வியாபாரிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ராயபுரம், கிழக்கு கல்லறை சாலை, ராஜகோபால் தெரு ஆகிய இடங்களில் வியாபாரம் செய்ய மாற்று இடம் வழங்கி உள்ளது. இந்த இரண்டு இடத்திலும் எந்த வியாபாரமும் நடக்காது. சரியான இடமும் இல்லை.
ஏற்கனவே 13 ஆண்டுகளாக இயங்கி வரும் வணிக வளாகத்தை புதுப்பித்து, புது கட்டடம் கட்டி அதில் எங்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து தர வேண்டும்.
மாநகராட்சி வாடகை என்ன நிர்ணயம் செய்கிறதோ, அதை நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம். மேலும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.