தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இழுபறி!

இழுபறி!

இழுபறி!


ADDED : செப் 25, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருங்களத்துார் மேம்பாலம் முழுதாக முடியாமல்... வனத்துறை இடம் ஒதுக்காததால் தொடரும் சிக்கல் நெற்குன்றம் பாதை பணி முடிந்தும் திறக்காத அவலம்

பெருங்களத்துார்: பெருங்களத்துாரில் 234 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் மார்க்கமான பணிகள் முடிந்தும், திறக்கப்படாமலே உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான, 4.46 ஹெக்டேர் நிலம் பெறுவதில் இரு ஆண்டுகளாக இழுபறி நீடிப்பதால், மேம்பாலம் கட்டியும் பயன்படுத்தாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை- – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலை- துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து மேம்பாலம் கட்ட. 10 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தன. இதற்காக, 234 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்தன.

முதற்கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- -– தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை, 2022 செப்., மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு குறைந்தது.

அடுத்த கட்டமாக, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதைக்கான பணிகள் வேகமாக நடந்து, 2023, ஜூன் மாதம் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமான பணிகளும் முடிக்கப்பட்டு, 2024 இறுதியில் திறக்கப்பட்டது. இதனால், பெருங்களத்துாரில் பல ஆண்டுகளாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

அதேநேரத்தில், இம்மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் சாலை மார்க்க பாதைக்கான பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டன.

அப்பாதை அமையும் இடத்தின் பெரும் பகுதி, வனத்துறைக்கு சொந்தமானவை என்பதால், அதன் அனுமதி கேட்டு, நெடுஞ்சாலைத் துறையினர் கடிதம் எழுதினர். தமிழக வனத்துறை, 2023ல் மத்திய வனத்துறைக்கு அனுப்பியது.

அதேநேரத்தில், பெருங்களத்துார் வழியாக ராஜகீழ்ப்பாக்கத்தை இணைக்கும், தாம்பரம் ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை திட்டத்திற்கும் நிலம் கேட்டு, மத்திய வனத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இரு கடிதங்களையும் பார்வையிட்ட மத்திய வனத்துறை அதிகாரிகள், இரண்டும் வெவ்வேறு திட்டம் என புரிந்து கொள்ளாமல், தனித்தனியாக கடிதம் அனுப்பட்டது ஏன் என, கேட்டு திருப்பி அனுப்பினர்.

இரண்டும் ஒரே திட்டம் இல்லை, வேறு வேறு திட்டம் என அவர்களுக்கு புரியவைத்து, இரண்டாவது முறையாக நிலம் கேட்டு, கடிதம் அனுப்பப்பட்டது.

நீண்ட போராட்டத்திற்கு பின், நெடுங்குன்றம் மார்க்கமான பாதை பணிகளுக்கு, 0.9 ஹெக்டர் நிலத்தை ஒதுக்கி, மத்திய வனத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, 27 கோடி ரூபாய்க்கு ‘டெண்டர்’ கோரப்பட்டு, 2025, ஆகஸ்ட் மாதம் பணிகள் தொடங்கின. தற்போது மேம்பால பணிகள் முடிந்து, திறப்புக்கு தயாராக உள்ளது.

ஆனால், மேம்பாலம் இறங்கும் இடத்தில் சாலை குறுகலாக உள்ளது. அப்படியே திறந்தால், ‘பீக் ஹவர்ஸ்’ எனும் அலுவலக வேலை நேரத்தில் கடும் நெரிசலும், விபத்துகளும் அதிகம் நடக்கும். அதனால், மேம்பாலம் இறங்கும் இடத்தில் சாலையை அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், மேம்பாலம் இறங்கும் இடத்தில் இருந்து தொடங்கும், தாம்பரம் ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை என்பது மற்றொரு திட்டமாகும்.

அத்திட்டத்தில் சாலை அமைக்க, வனத்துறைக்கு சொந்தமான, 4.46 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலத்தை பெறுவதில், இரண்டு ஆண்டுகளாக இழுபறி நீடிக்கிறது.

இதனால், பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் மார்க்கமான பாதை பணிகள் முடிந்தும், பயன்பாட்டிற்கு திறக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எதனால் தாமதம் பெருங்களத்துார் மேம்பாலத்தில், நெடுங்குன்றம் மார்க்கமாக இறங்கியதும், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை தொடங்குகிறது. இச்சாலை தொடங்கும் இடம், வனத்துறைக்கு சொந்தமான, 4.46 ஹெக்டர் நிலத்தில் சாலை அமையவுள்ளது. இந்த இடத்தை பெற, அதற்கீடாக இரண்டு மடங்கு அளவுள்ள மாற்று இடம் வழங்க வேண்டும். அதாவது, 8.92 ஹெக்டர் நிலத்தை வனத்துறைக்கு வழங்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம், வேதநாராயணபுரத்தில் மாற்று இடமும் கண்டறியப்பட்டு, வருவாய் துறையிடம் உள்ளது. அப்படியிருந்தும் நிலம் பெறுவதில் இரு ஆண்டுகளாக இழுபறி நீடிப்பதால், சாலைப் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது; மேம்பால திறப்பும் தடைபட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us