/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நல்ல சாலையை உடைக்கும் மாநகராட்சிக்கு கடும் எதிர்ப்பு
/
நல்ல சாலையை உடைக்கும் மாநகராட்சிக்கு கடும் எதிர்ப்பு
நல்ல சாலையை உடைக்கும் மாநகராட்சிக்கு கடும் எதிர்ப்பு
நல்ல சாலையை உடைக்கும் மாநகராட்சிக்கு கடும் எதிர்ப்பு
ADDED : ஜூலை 26, 2025 12:18 AM

சென்னை :நல்ல நிலையில் உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து புதிதாக சிமென்ட் கல் சாலை அமைக்க, சிந்தாதிரிப்பேட்டை மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் சிங்கன்னசெட்டி தெருவில், 1 முதல் 3 வரை சந்துகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே, மாநகராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலைகள் நன்றாக உள்ள நிலையில், புதிதாக சிமென்ட் கல் சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு, பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.
இதற்காக நேற்று காலை, சிங்கன்னசெட்டி தெரு இரண்டாவது சந்தில், ராட்சத டிரில்லிங் இயந்திரத்தை கொண்டு கான்கிரீட் உடைக்கும் பணியை, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர்.
அப்பகுதிமக்கள், 'இங்குள்ள சில வீடுகள் 50 ஆண்டுகள் பழமையானது என்பதால், ராட்சத இயந்திரத்தால் சாலையை உடைத்தால் வீடுகள் சேதமடையும்' எனக்கூறி, பணி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஒப்பந்ததாரர், சாலை உடைப்பு பணியை பாதியில் நிறுத்தினர்.
சிந்தாதிரிப்பேட்டை மக்கள் கூறுகையில், 'நன்றாக இருக்கும் சாலையை எதற்காக உடைத்து, புதிதாக சிமென்ட் கல் சாலை அமைக்க முயற்சிக்கின்றனர் என தெரியவில்லை.
'அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், மக்களுக்கு சேவை செய்வதாக கூறி பணத்தை வீணடிக்கின்றனர்' என்றனர்.