/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - வேளச்சேரி சாலை சீரமைக்க வலுக்கும் கோரிக்கை
/
தாம்பரம் - வேளச்சேரி சாலை சீரமைக்க வலுக்கும் கோரிக்கை
தாம்பரம் - வேளச்சேரி சாலை சீரமைக்க வலுக்கும் கோரிக்கை
தாம்பரம் - வேளச்சேரி சாலை சீரமைக்க வலுக்கும் கோரிக்கை
ADDED : பிப் 04, 2024 01:38 AM

தாம்பரம்:சென்னை ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகராக, அதிக போக்குவரத்து கொண்டது, தாம்பரம் - வேளச்சேரி சாலை. இச்சாலை, சமீபத்திய பருவமழையில் ஜல்லிகள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ச்சியான பள்ளங்களால், முதுகு வலி, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கின்றனர். முக்கியமான இச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஆங்காங்கே ஒட்டு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்னும் சில இடங்களில், சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவே உள்ளது. ஐ.ஏ.எப்., சாலை சந்திப்பு, அம்மா உணவகம் சந்திப்பு, திருப்பூர் குமரன் பூங்கா சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், குண்டும் குழியுமாக இருப்பதால் பெரும் சிரமப்படுகின்றனர்.
இதனால், வாகன ஓட்டிகளின் வசதியை கருத்தில் வைத்து, தாம்பரம் - வேளச்சேரி சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.