ADDED : பிப் 12, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்மங்கலம்:மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தில், அருள்முருகன் நந்தவனம் நகர் செல்லும் வழியில், ஏரிக்கரை ஓரமாக தமிழக அரசின் 'டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது.
சாலைக்கு மிக அருகே உள்ள இந்த மதுக்கடையால், அவ்வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் உள்ளது.
இரவில் பணி முடித்து வீடு திரும்பும் பொதுமக்களுக்கு, 'குடி'மகன்களால் அச்சுறுத்தல் நிகழ்கிறது. எனவே, இந்த மதுக்கடையை மூடக்கோரி, 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.