ADDED : மே 08, 2025 12:31 AM
சென்னை, கண்ணதாசன் நகர் - அண்ணாசதுக்கம் செல்லும் வழித்தடம் எண், 2 ஏ பேருந்தில், 18 வயது கல்லுாரி மாணவி பயணித்தார். அதே பேருந்தில். விவேகானந்தா கல்லுாரியில் பயிலும் மனோஜ்குமார், 19 என்ற மாணவர், அந்த மாணவியை விதவிதமாக மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். மாணவியை இடித்து, தொந்தரவு கொடுத்துள்ளார்.
ஓமந்துாரார் அரசு மருத்துவமனை நிறுத்தம் வந்தபோது, மாணவரின் செயலால் ஆத்திரமடைந்த மாணவி, சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தினார். அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த திருவல்லிக்கேணி போலீசாரிடம் மாணவரை பிடித்துக் கொடுத்தார். காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவர் மனோஜ்குமாரின் மொபைல் போனை சோதனை செய்ததில், அதில் ஏராளாமான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து மாணவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
