/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை
/
மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை
ADDED : ஜூலை 24, 2025 12:42 AM
சென்னை,
ராயப்பேட்டையில், அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து குதித்து, கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராயப்பேட்டை, மாசிலாமணி தெருவைச் சேர்ந்தவர் ஆதித்யா, 20; கல்லுாரி மாணவர். நேற்று மாலை கல்லுாரி முடித்து வீட்டிற்கு திரும்பினார்.
பின் குடியிருப்பின் மாடியில், யோகா பயிற்சி மேற்கொள்ளப்போவதாக அவரது தாயிடம் கூறி சென்றார். சிறிது நேரத்திலேயே, நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராயப்பேட்டை போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆதித்யா 4 ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.