தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை


UPDATED : நவ 03, 2024 07:13 AM

ADDED : நவ 03, 2024 12:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2024 07:13 AM ADDED : நவ 03, 2024 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடுவாஞ்சேரி: வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா எதிரில் கிரசண்ட் கல்லுாரி உள்ளது. திருச்சி மாவட்டம், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த முகமது உமர், 23, என்பவர் மூன்றாம் ஆண்டு மாணவர். கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில் ஐந்தாவது மாடியில் தங்கி உள்ளார்.

நேற்று அதிகாலை 4.00 மணி அளவில், மாடியிலிருந்து திடீரென முகமது உமர் கீழே குதித்துள்ளார். சத்தம் கேட்டு பாதுகாவலர் வந்து பார்த்தபோது மூச்சுப் பேச்சு இன்றி கிடந்துள்ளார்.

புகாரின் படி போலீசார் விரைந்து வந்து, முகமது உமரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us