தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாணவருக்கு வெட்டு மேலும் மூவர் கைது

மாணவருக்கு வெட்டு மேலும் மூவர் கைது

மாணவருக்கு வெட்டு மேலும் மூவர் கைது


ADDED : பிப் 29, 2024 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடக்கு கடற்கரை, கொருக்குப்பேட்டை, அனந்தநாயகி நகரைச் சேர்ந்தவர் சாமுவேல், 20. இவர், மாநிலக் கல்லுாரியில் பி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார்.

கடந்த 12ம் தேதி காலை, சென்னை கடற்கரை பேருந்து நிலையத்தில், தன் நண்பர்கள் பிரின்ஸ், சஞ்சய் ஆகியோருடன் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த கும்பல், திடீரென சாமுவேலை கத்தியால் வெட்டி தப்பினர்.

இதில் படுகாயமடைந்த சாமுவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரித்தனர். தாக்குதல் நடத்திய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புவியரசு, 18, சுஜித்குமார், 20 மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த பிரகாஷ், 21, நவீன்குமார், 21 மற்றும் ருத்ரமூர்த்தி, 24, ஆகியோரை, வடக்கு கடற்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us