ADDED : ஜூலை 19, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை:குரோம்பேட்டையில், லோடு வேன் மோதி கல்லுாரி மாணவி பலியானார்.
சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் நஸ்ரின் பாத்திமா, 22. இவர், தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி., கல்லுாரியில் எம்.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை குரோம்பேட்டை, ரேடியல் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டி சென்றார். அப்போது, அந்த வழியாக சென்ற லோடு வேன் மோதியது. இதில், பலத்த காயமடைந்த நஸ்ரின் பாத்திமா, சம்பவ இடத்திலேயே பலியானார்.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய லோடு வேன் ஓட்டுநர் செங்குட்டுவன், 39, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.