ADDED : ஜூலை 26, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம் :ஆட்டோ மீது பைக் மோதி சாலையில் விழுந்த மாணவர், டிராக்டர் ஏறியதில் இறந்தார்.
ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் மகன் நந்தகுமார், 18; 'ஜியோன்' எனும் தனியார் கணினி பயிற்சி மையத்தில் படித்து வந்தார். 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் நேற்று காலை ஆதம்பாக்கம், ஏ.எஸ்.கே., நகர் பிரதான சாலை வளைவில் திரும்பினார்.
எதிர் திசையில் வந்த ஆட்டோ மீது பைக் மோதி, சாலையில் விழுந்தார். அப்போது, கக்கன் பிரதான சாலையில் இருந்து சிட்டி லிங்க் சாலைக்கு, தண்ணீர் ஏற்றி சென்ற டிராக்டர், நந்தகுமார் மீது ஏறியதில் அங்கேயே இறந்தார்.
பரங்கிமலை போலீசார் டிராக்டர் ஓட்டுநரான கடலுார் மாவட்டம், மேல்கவரப்பட்டு பாண்டியராஜன், 23, என்பவரை கைது செய்தனர்.