/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடியில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு
/
மாடியில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு
ADDED : மார் 17, 2025 11:44 PM
சென்னை, புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஆயிஷா, 19; தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரியில், 2ம் ஆண்டு மாணவி. கடந்த, 12ம் தேதி, கல்லுாரியின் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்தார்.
இதில் இடுப்பு, முதுகு எலும்பு முறிந்து படுகாயமடைந்த அவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தேனாம்பேட்டை போலீசார் விசாரணையில், ஆயிஷாவின் சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்ததும், அவரது இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாத ஆயிஷா, தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருந்த ஆயிஷா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.