/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் தாக்கி மாணவி பலி மொபைல் போன் சார்ஜ் போட்டபோது விபரீதம்
/
மின்சாரம் தாக்கி மாணவி பலி மொபைல் போன் சார்ஜ் போட்டபோது விபரீதம்
மின்சாரம் தாக்கி மாணவி பலி மொபைல் போன் சார்ஜ் போட்டபோது விபரீதம்
மின்சாரம் தாக்கி மாணவி பலி மொபைல் போன் சார்ஜ் போட்டபோது விபரீதம்
ADDED : மார் 24, 2025 03:09 AM

எண்ணுார்:எர்ணாவூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகுந்தன், 40; ஆட்டோ ஓட்டுனர். அவரது மனைவி விஜயா, 38. இவர்களது மகள் அனிதா, 14. கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9 ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, விஜயா, இளைய மகள் எழில்மதியுடன் மளிகை கடைக்கு சென்றிருந்தனர். வீட்டில் படித்துக் கொண்டிருந்த அனிதா, மொபைல் போன், சார்ஜ் போட முயன்றபோது, சுவிட்ச் போர்டில் இருந்து மின்சாரம் கசிந்துள்ளது.
இதில், மின்சாரம் தாக்கி அனிதா துாக்கி வீசப்பட்டார்.
அதிர்ச்சியடைந்த முகுந்தன், மயங்கி விழுந்த மகளை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அனிதாவை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், ஈரக் கையுடன் மொபைல் போனுக்கு சார்ஜ் போட முயன்றபோது, மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்தது தெரியவந்தது.