ADDED : நவ 06, 2025 03:28 AM
திருவேற்காடு: தற்கொலை செய்து கொண்ட மகளின் கண்களை, பெற்றோர் தானமாக வழங்கினர்.
திருவேற்காடு, சுந்தரசோழபுரம், ராம் நகரைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 45; 'ஏசி' மெக்கானிக். இவரது மனைவி சுமதி, 40; தனியார் பள்ளி ஆசிரியை. தம்பதிக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
மகள் ஹரிணி, 17; தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரி முடிந்ததும், ஜெய் கணேஷ் ஹரிணியை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு, கதவை பூட்டி சென்றுள்ளார்.
மாலை அவரது மனைவி பணி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஹரிணி படுக்கை அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.
அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. திருவேற்காடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, பெற்றோர் சம்மதத்துடன் ஹரிணியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

