ADDED : செப் 05, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
கோட்டூர்புரம்: கொட்டும் மழையில், தெருவிளக்கு மின் கம்பத்தில் விளம்பர பதாகை கட்டும் பணியில் ஈடுபட்ட, ஜெயசந்திரன், 18, என்ற கல்லுாரி மாணவன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன். மயிலாப்பூரில் விடுதியில் தங்கி, நந்தனம் கல்லுாரியில் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மத்திய கைலாஷ் பகுதியில், தெருவிளக்கில் கட்டுமான நிறுவனத்தின் விளம்பர பதாகை கட்டும் பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
