தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவி கூட்டு பலாத்காரம் மேலும் இருவருக்கு 'காப்பு'

மாணவி கூட்டு பலாத்காரம் மேலும் இருவருக்கு 'காப்பு'

மாணவி கூட்டு பலாத்காரம் மேலும் இருவருக்கு 'காப்பு'


ADDED : செப் 22, 2024 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2024 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர் : தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட 14 வயது மாணவி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.

கடந்த 18ம் தேதி இரவு, மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக, ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்றுள்ளார்.

இதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து சென்ற சுந்தர், 22, மற்றும் 15 வயது சிறுவர்கள் இரண்டு பேர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். மாணவி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பலாத்காரத்தில் ஈடுபட்ட மூவரும் தப்ப முயன்றனர். அதில், சுந்தர் மட்டும் சிக்கினார். அவர், தாழம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு, சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சுந்தர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மற்ற 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us