ADDED : அக் 18, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெரினா: ராயபுரம், கிளைவ் பேக்டரி, லயன் பீச் சாலையைச் சேர்ந்தவர் கவியரசு, 20; விவேகானந்தா கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர்.
நேற்று காலை, கல்லுாரியில் தேர்வு எழுதி விட்டு, நண்பர்கள் ஆறு பேருடன் மதியம், 12:00 மணிக்கு அவ்வையார் சிலை பின்புறம், கடலில் குளித்தார்.
அப்போது பெரிய அலையில் சிக்கிய கவியரசு, இழுத்துச் செல்லப்பட்டார். சக மாணவர்கள் தகவலின்படி மெரினா போலீசார், கடலோர காவல் படையினர், மீனவர்கள் ஆகியோர் கடலில் மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.