sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்

/

 மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்

 மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்

 மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்


ADDED : ஜன 20, 2026 05:31 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நேற்று துவக்கியது.

பெரம்பூர் பல்லவன் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 பயிலும் 604 மாணவியருக்கு, சைக்கிள்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார்.

நிகழ்வில், மேயர் பிரியா பேசியதாவது:

பொதுத் தேர்வுக்கு தயாராகிவரும் மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியர் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று துவக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 12,558 பேர் பயன் பெறுவர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவ - மாணவியர் நன்றாக படித்து உயர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us