தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவரை கத்தியால் வெட்டி டூ - வீலர் பறிப்பு

மாணவரை கத்தியால் வெட்டி டூ - வீலர் பறிப்பு

மாணவரை கத்தியால் வெட்டி டூ - வீலர் பறிப்பு


ADDED : மார் 25, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவிலம்பாக்கம்

பள்ளிக்கரணை, காமாட்சி நகர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், 20.

இவர், ஜல்லடியன்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கிறார். பகுதி நேரமாக, 'ஸ்விக்கி' எனும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இவர், நேற்று இரவு 10:30 மணி அளவில், கோவிலம்பாக்கம் பகுதியில் உணவு டெலிவரி செய்துவிட்டு வரும்போது, வழியில் இருவர் 'லிப்ட்' கேட்டுள்ளனர். செல்வகுமாரும் வாகனத்தை நிறுத்தி இருவரையும் ஏற்றி உள்ளார்.

கோவிலம்பாக்கம் அரசு பள்ளி-க்கும் கோவலம்பாக்கம் போலீஸ் பூத்திற்கும் இடையே வரும்போது, இறங்கி கொள்வதாக கூறி இறங்கி உள்ளனர்.

திடீரென, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வகுமாரின் தலையில் வெட்டி, அவரது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர்.

இந்த கொடூரம் சம்பவம் குறித்து, அப்பகுதியில் சென்றோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து, மேடவாக்கம் காவல் நிலைய ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, செல்வகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us