/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரியில் மாணவி தற்கொலை முயற்சி
/
கல்லுாரியில் மாணவி தற்கொலை முயற்சி
ADDED : அக் 30, 2024 12:09 AM
வேளச்சேரிவேளச்சேரி ஏ.ஜி.எஸ்., காலனியை சேர்ந்த 21 வயது மாணவி, வேளச்சேரி குருநானக் கல்லுாரியில், பி.ஏ., பொருளாதாரம் படித்து வருகிறார். படிப்பு கட்டணம் தொடர்பாக, கல்லுாரி நிர்வாகத்திற்கும், மாணவிக்கும் பிரச்னை இருந்துள்ளது. நேற்றுமுன்தினம், மாணவியை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த மாணவி, கல்லுாரி வளாகத்தில் வைத்து, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்குள்ள ஊழியர்கள், வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கிண்டி போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கு கட்டண பிரச்னை காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என, கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.