ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்
ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்
ADDED : மார் 12, 2026 05:16 AM

சென்னை: மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில், முதுகு தண்டுவட எலும்புகள் பாதிப்படைந்ததால், மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பத்தாம் வகுப்பு மாணவர், ஆம்புலன்ஸ் வாயிலாக பள்ளிக்கு வந்து, ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே, நேற்று பொதுத்தேர்வை எழுதினார்.
மடிப்பாக்கம், பாலய்யா கார்டன், திலகர் அவென்யூ, 10வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பரணிதரன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி காயத்திரி. இவர்களது மகன் சாய் கார்த்திக், 15.
இவர் மடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. அதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மேல் மாடியில் படித்துக் கொண்டிருந்த சாய் கார்த்திக், இறங்கி வீட்டிற்கு செல்ல முயன்றபோது, கால் இடறி கிழே விழுந்தார்.
இதில், அவரின் முதுகு தண்டுவடத்தில் எல்-1, எல்-2, எல்-4, எல்-5 ஆகிய எலும்புகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச் சை பெற்ற நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் நாளான நேற்று, தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு துவங்கியது.
இதை ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, மாணவரின் தந்தை பள்ளிக்கல்வித்துறையை அணுகினார். பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்து, அதற்கான உதவிகளை மேற் கொண்டால், தேர்வு எழுத அனுமதிப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளியின் தலைவர் வாசுதேவனிடம் கோரியபோது, சி றப்பு ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து, பள்ளியில் மாணவர் தேர்வு எழுத, தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டது.
நேற்று காலை, வகுப்பறை வரை ஆம்புலன்ஸ் அனுமதிக்கப்பட்டு, அதிலிருந்து மாணவர் ஸ்ட்ரெட்சர் வாயிலாக வகுப்ப றைக்கு அழைத்து வரப்பட்டார்.
அதில் படுத்தபடியே சாய் கார்த்திக் கூறுவதை எழுத, ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த வகையில், மாணவர் சாய் கார்த்திக் முதல் தேர்வை எழுதி முடித்தார்.
