/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர்களுக்கு வெட்டு சக மாணவர்கள் கைது
/
மாணவர்களுக்கு வெட்டு சக மாணவர்கள் கைது
ADDED : அக் 19, 2025 03:23 AM
சென்னை: கல்லுாரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சக மாணவர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர்கள் மதன், 19, பிரசாத், 19. இருவரும், சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், பி.இ., படிக்கின்றனர்.
அதே கல்லுாரியில் படிப்பவர்கள் சஜத், 19, சக்தி, 19. நான்கு பேரும், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். கல்லுாரியில் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த தகராறில் சஜத், சக்தி ஆகியோர், கத்தியால் மதன், பிரசாத்தை வெட்டினர். பலத்த காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து விசாரித்த செம்மஞ்சேரி போலீசார், சஜத், சக்தி ஆகிய இருவரை கைது செய்தனர்.