ADDED : ஜன 31, 2025 12:14 AM

அ நிறம் | அளவு
சென்னை,
சென்னை, ஷெனாய் நகர், அம்மா அரங்கில் தமிழக வட்ட அஞ்சல் துறையின் 14வது மாநில அளவிலான தபால் தலை கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று, 'தமிழ்நாட்டின் இயற்கை அதிசயங்கள்' எனும் கருப்பொருளுடன் நடத்தப்பட்டது.
இதில், வேடந்தாங்கலில் இடம்பெயர்ந்த பறவை என்ற தலைப்பிலான கருத்தரங்கை, சென்னை வனவாழ்வியல் பாதுகாவலர் மனிஷ் மீனா தலைமையில் நடைபெற்றது. மேலும் அஞ்சல் ஊழியர்களுக்கு இறகு எழுத்துகள் என்கின்ற தலைப்பிலான பயிலரங்கை, துாரிகை கலைஞர் ஜெயபிரீத்தி நடத்தினார்.
கண்காட்சியின் இரண்டாம் நாளின் முடிவில், 5,500 பேர் கண்டு ரசித்தனர்.
