/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநிலக்கல்லுாரி விடுதி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
/
மாநிலக்கல்லுாரி விடுதி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 08, 2025 12:28 AM

சென்னைசென்னை மாநிலக் கல்லுாரி விடுதி மாணவர்களுக்கு தரமற்ற உணவு, குடிநீர் வழங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, மாநிலக்கல்லுாரி வளாகத்தில், காது கேளாத, வாய் பேச இயலாத, பார்வையற்ற மாணவ - மாணவியருக்கு சிறப்பு விடுதிகள் செயல்படுகின்றன. இதில், 300க்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர்.
அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும், சுவையற்றதாகவும்உள்ளது; விடுதியில் குடிநீர் வசதியில்லை. அதனால், கல்லுாரிக்குச் சென்று, குடிநீர் பிடித்து வர வேண்டியுள்ளது.
இது, மாற்றுத்திறனாளிமாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. அவற்றை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, நேற்று முன்தினம் இரவு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்ய முயன்றனர். கல்லுாரி முதல்வர் வர வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். சமாதானம் செய்த பின்னர், விடுதிக்குள் சென்ற மாணவர்கள், நேற்று காலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், மாணவர்களுடன் பேச்சு நடத்திய கல்லுாரி முதல்வர், தற்காலிகமாக விடுதியில் கேன் குடிநீர்வழங்கவும், தரமான உணவு வழங்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.