/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் இருந்து நடத்துநரை தள்ளிவிட்ட மாணவர்கள்
/
பஸ்சில் இருந்து நடத்துநரை தள்ளிவிட்ட மாணவர்கள்
ADDED : நவ 15, 2025 12:13 AM
சேலையூர்: பேருந்தில் இருந்து நடத்துநரை தள்ளிவிட்ட மாணவர்களால், சலசலப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூசாமி, 45; மாநகர பேருந்து நடத்துநர். இவர் நேற்று முன்தினம், சேலையூரை அடுத்த அகரத்தில் இருந்து தாம்பரத்திற்கு வந்த தடம் எண்: 31ஏ என்ற பேருந்தில், நடத்துநராக பணியாற்றினார்.
சேலையூர், ஆதிநகர் அருகே வந்தபோது, பள்ளி மாணவர்கள் சிலர், பேருந்து படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இதை கவனித்த ஓட்டுநர் கோவிந்தசாமி, பேருந்தை நிறுத்தினார்.
இதையடுத்து, நடத்துநர் பூசாமி, கீழே இறங்கி மாணவர்களை தட்டி கேட்டார். அப்போது, மாணவர்கள், அவரை கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டனர். இதில், கீழே விழுந்த பூசாமிக்கு, வாய் பகுதியில் காயம் ஏற்பட்டது; பல்லும் உடைந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

