ADDED : மார் 27, 2026 05:40 PM
தாம்பரம்: கிழக்கு தாம்பரத்தில் மாதிரி ஓட்டுச்சாவடி அமைத்து, தேர்தலில் ஓட்டளிப்பதுபோல் பள்ளி மாணவ - மாணவியர் வரிசையில் நின்றி ஓட்டளித்தனர்.
தாம்பரம் சட்டசபை தொகுதியில், தேர்தல் தொடர்பாக, மனித சங்கிலி, துண்டு பிரசுரம், கோலம் ஆகியவற்றின் வாயிலாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கிழக்கு தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், மாணவ - மாணவியர் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது.
ஓடுச்சாவடி எப்படி இருக்குமோ, அதே வடிவமைப்பில் மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, 6 - 9ம் வகுப்பு மாணவர்கள் வரிசையாக நின்று, ஓட்டளித்தனர்.
பின், 'வீட்டிற்கு சென்று, குடும்பத்தினர் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்த வேண்டும்' என, மாணவ - மாணவியருக்கு, தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
