/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளியில் மது அருந்திய மாணவர்கள் தட்டிக்கேட்ட மாணவருக்கு அடி, உதை
/
பள்ளியில் மது அருந்திய மாணவர்கள் தட்டிக்கேட்ட மாணவருக்கு அடி, உதை
பள்ளியில் மது அருந்திய மாணவர்கள் தட்டிக்கேட்ட மாணவருக்கு அடி, உதை
பள்ளியில் மது அருந்திய மாணவர்கள் தட்டிக்கேட்ட மாணவருக்கு அடி, உதை
ADDED : ஜூலை 19, 2025 11:16 PM
மதுரவாயல்:பள்ளி வளாகத்தில் மது அருந்தி அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை, தட்டிக்கேட்ட சக மாணவன் தாக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் மூன்று பேர், நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது, அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன், தன் நண்பருடன் அங்கு சென்றார்.
அந்த மாணவனை மது அருந்த அங்கிருந்த மூவரும் வற்புறுத்தி உள்ளனர். இதை, உடன் வந்த நண்பர் தடுக்க முயன்ற, போது மது போதையில் இருந்த மூன்று மாணவர்களும் சேர்ந்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், அந்த மாணவனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த மாணவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.