/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெற்றோருக்கு பயந்து பூங்காவில் சுற்றித்திரிந்த மாணவர்கள் மீட்பு
/
பெற்றோருக்கு பயந்து பூங்காவில் சுற்றித்திரிந்த மாணவர்கள் மீட்பு
பெற்றோருக்கு பயந்து பூங்காவில் சுற்றித்திரிந்த மாணவர்கள் மீட்பு
பெற்றோருக்கு பயந்து பூங்காவில் சுற்றித்திரிந்த மாணவர்கள் மீட்பு
ADDED : செப் 08, 2025 06:20 AM
ஆவடி: கிருஷ்ணா கால்வாயில் குளித்த மூன்று மாணவர்கள், வீட்டிற்கு தாமதமாக சென்றால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயந்து, பூங்காவில் சுற்றித்திரிந்தனர். அந்த மாணவர்களை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ், 32; தோட்ட தொழிலாளி. அவரது மகன் சாரதி, 13; அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல், கோவில்பதாகை, குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் பாபு, 33; மாநகராட்சி துாய்மை பணியாளர். அவரது மகன்கள் ஹரிஷ், 13, ரூபன், 11 ஆகியோர் முறையே, 8, 6ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த 5ம் தேதி, அரசு விடுமுறை என்பதால், சாரதி, ஹரிஷ், ரூபன் மூவரும் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றனர். நேரம் போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால், பயந்து போன சிறுவர்கள் வீட்டுக்கு செல்லாமல், அப்பகுதியில் சுற்றி திரிந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து சிறுவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆவடி எச்.வி.எப்., எஸ்டேட்டில் உள்ள அர்ஜுன் பார்க்கில் மூவரும் சுற்றித்திரிவது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று மூன்று சிறுவர்களையும் மீட்டு, பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.