தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சப் -  ஜூனியர் வாலிபால் சென்னை இரண்டாமிடம்

சப் -  ஜூனியர் வாலிபால் சென்னை இரண்டாமிடம்

சப் -  ஜூனியர் வாலிபால் சென்னை இரண்டாமிடம்


ADDED : பிப் 03, 2024 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, வேலுார் மாவட்டம் வாலிபால் சங்கம், 41வது சப் - ஜூனியருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியை, வேலுாரில் மூன்று நாட்கள் நடத்தியது. சென்னை, காஞ்சிபுரம், வேலுார் உட்பட மாநில முழுதும் இருந்து, ஏராளமான அணிகள் பங்கேற்றன.

சிறுமியருக்கான இறுதி போட்டியில், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி அணிகள் எதிர்கொண்டன.

அதில், 3 - 1 என்ற செட் கணக்கில் சேலம் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.

அதேபோல், சிறுவர்களுக்கான ஆட்டத்தில், சென்னை மற்றும் திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான போட்டியில், 3 - 1 என்ற கணக்கில் திருச்சி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. சென்னை மாவட்ட இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின் பொதுச் செயலர் மார்டின் சுதாகர் பரிசுகளை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us