ADDED : ஜூலை 09, 2026 01:30 AM

அ நிறம் | அளவு
அடுத்தடுத்து மின்மாற்றி வெடிப்பு
பரங்கிமலை ஒன்றி யம், நன்மங்கலம் பெருமாள் நகர் பிரதான சாலையில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இங்குள்ள மின் மாற்றி, அதிக மின்னழுத்தம் காரணமாக, நேற்று அதிகாலை 2:15 மணிக்கு, திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
புழல், அந்தோணியார் கோவில் மூன்றாவது தெருவில் உள்ள மின்மாற்றி, அதிக மின்னழுத்தம் காரணமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு வெடித்தது. தீப்பொறி சிதறியதில், அதன் கீழே நிறுத்தியிருந்த பைக் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
மேற்கு சைதாப்பேட்டை, கொத்தவால்சாவடி தெருவில், மின் கேபிள் எரிந்ததால் மின்தடை ஏற்பட்டது.
மின்மாற்றி மற்றும் கேபிள் தீப்பிடித்து எரிந்ததால், மேற்கண்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் பல மணிநேரம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை மின்சாரம் சீரானது.
