UPDATED : அக் 10, 2026 08:50 PM
ADDED : அக் 10, 2026 08:46 PM

சென்னை: சென்னை விமான நிலையத்தில், வாகனங்கள் நிறுத்த கட்டணத்தை, ஐந்து ரூபாயில் இருந்து, 110 ரூபாய் வரை உயர்த்தி, விமான நிலைய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கார்களை நிறுத்த, 30 நிமிடங்களுக்கு, 85ல் இருந்து 90 ரூபாய்; ஒரு மணி நேரத்திற்கு, 110ல் இருந்து, 115 ரூபாய்; இரண்டு மணி நேரத்திற்கு, 165லிருந்து, 175 ரூபாய்; 24 மணி நேரம் வரை, 550 ரூபாயில் இருந்து, 580 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
டூ வீலர்கள்
இரு சக்கர வாகனங்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய்; இரண்டு மணி நேரத்திற்கு 35 ரூபாய் என்ற கட்டணமே தொடரும்.
அதற்குமேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 5 முதல் 10 ரூபாய்வரை கூடுதலாக வசூலிக்கப்படும்.
விமான நிலையத்திற்குள் பயணியரை ஏற்றி செல்ல வரும், 16 சீட்களுக்கு குறைவான வாகனங்களுக்கு, முதல் 30 நிமிடங்களுக்கான கட்டணம், 15 ரூபாய் உயர்த்தப்பட்டு, 345 ரூபாய் வசூலிக்கப்படும்.
அதன்பின், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் கட்டணம் உயரும். பத்து மணி வரை வாகனங்கள் நிறுத்த, 990 ரூபாயில் இருந்து, 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,040 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என, விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
