ADDED : ஜன 15, 2026 06:30 AM

அ நிறம் | அளவு
சென்னை: கொரட்டூரில், திடீரென சாலை உள்வாங்கி, சிறிய அளவிலான பள்ளம் விழுந்தது. மண்டல அதிகாரிகள், அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கொரட்டூர், கிழக்கு நிழற்சாலையில், நேற்று மாலை திடீரென இரண்டு அடி அகலம், நான்கு அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கி, சிறிய அளவிலான பள்ளம் விழுந்தது.
வாகன ஓட்டிகள் அளித்த தகவலின்படி, கொரட்டூர் போலீசார் அங்கு சென்று, பள்ளத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்தனர். மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மெட்ரோ குழாயில் ஏற்பட்ட பழுதால், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் பள்ளம் விழுந்திருக்கலாம் என, அம்பத்துார் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.
