/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை
/
பா.ஜ., பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை
ADDED : நவ 10, 2024 12:40 AM

செங்குன்றம், செங்குன்றத்தில், பா.ஜ பிரமுகர் வீட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன், 53; பா.ஜ., மாநில ஓ.பி.சி., அணி செயலர். இவரது வீட்டிற்கு சென்ற, ஆவடி கமிஷனரக மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, சோதனை நடத்தினர்.
அவர் மீதான வழக்கு தொடர்பான விசாரணைக்காக, திடீர் சோதனை நடத்தியது தெரியவந்தது. சோதனையின் முடிவில் எந்த ஆவணமும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த ஏப்.,17ல், லோக்சபா தேர்தலின் போது, பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர், இவரது வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால், பொருட்கள் ஏதும் சிக்கவில்லை.