ADDED : மே 09, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், அண்ணா நகர், கார்டன் தெருவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தார் சாலை போடப்பட்டது. அதன்பின், ஜல்லி பெயர்ந்து, சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.
மழை காலத்தில், சாலையில் குட்டை போல் வெள்ளம் தேங்கி நிற்கிறது. வெயில் காலத்தில், சாலையில் இருந்து வெளியேறும் புழுதி, வாகன ஓட்டிகளை பாதிப்பதோடு, வீடுகளிலும் படிகிறது.
சாலை படு மோசமாக இருப்பதால், சிறுவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

