/
புகார் பெட்டி
/
சென்னை
/
30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அவதி
/
30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அவதி
ADDED : செப் 09, 2025 08:41 AM

ஆவடி அடுத்த பட்டாபிராம், கிழக்கு கோபாலபுரம், ஆறாவது பிரதான சாலை, மூன்றாவது குறுக்கு தெருவில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த தெருவிற்கு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி ஏற்படுத்தவில்லை. மண் பாதையாக இருப்பதால் செடி, கொடிகள் மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. ஒவ்வொரு மழைக்காலத்திலும், இப்பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. அப்போது, மழைநீருடன் சேர்ந்து வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் படை எடுக்கின்றன.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், ஆவடி மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், மழைக்கு முன் கட்டட கழிவுகளையாவது கொட்டி, தற்காலிக சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.
- ஸ்ரீதர், கோபாலபுரம், ஆவடி.