ADDED : மே 03, 2025 11:52 PM
அ நிறம் | அளவு
சென்னை, சமூக நலத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், காவல் துறை இணைந்து, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், பள்ளி குழந்தைகளுக்கான கோடைக்கால இலவச கலை பயிற்சி நடத்துகின்றன.
வரும் 24ம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில், ஓவியம் வரைதல், நடனம், சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம், பறையிசை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சி, வாரியத்தின் பிளாக் 32 மற்றும் 92ல் நடைபெறும். பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.
