ADDED : ஏப் 13, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கான கோடை கால பயிற்சி முகாம், சென்னையின் பல்வேறு இடங்களில், வரும் 17ம் தேதி துவங்க உள்ளது.
இதில், 18 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி முகாம், தினமும் காலை மற்றும் மாலையில் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்கும் மாணவ - மாணவியருக்கு பால், முட்டை போன்ற ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது.
இதில் பங்கேற்கும் அனைத்து மாணவ - மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல் அறிய, 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
