ADDED : அக் 16, 2024 12:11 AM
மூழ்கியது மூலக்கொத்தளம் சுரங்கம்
வியாசர்பாடி, கணேசபுரம் மற்றும் மூலக்கொத்தளம் ரயில்வே சுரங்கப் பாதையில் வெள்ள நீர் நிரம்பியதால், வாகன ஓட்டிகள் திணறினர். சுரங்கப் பாதையில் 4 அடிக்கு மழை நீர் நிரம்பியுள்ளது. அதை மோட்டார் வைத்து மாநகராட்சியினர் வெளியேற்றினர். ஆனாலும், தொடர் மழையால் சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
முல்லை நகரில் படகு சர்வீஸ்
வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் மழைநீர் இடுப்பளவு உள்ளதால், அங்குள்ள குடியிருப்புவாசதிகள் படகு மூலமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அன்றாட பொருட்களை வாங்கி வர படகு பயணம் செய்தனர்.
தொடர் மழையால், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியது. மழைநீரை வெளியேற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.