தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சமூக நல்லிணக்கம் மேலோங்க தி.மு.க.,வை ஆதரியுங்கள்: அரவிந்த் ரமேஷ் பிரசாரம்

 சமூக நல்லிணக்கம் மேலோங்க தி.மு.க.,வை ஆதரியுங்கள்: அரவிந்த் ரமேஷ் பிரசாரம்

 சமூக நல்லிணக்கம் மேலோங்க தி.மு.க.,வை ஆதரியுங்கள்: அரவிந்த் ரமேஷ் பிரசாரம்


ADDED : ஏப் 11, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 05:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், பாலவாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது, அரவிந்த் ரமேஷ் கூறியதாவது:

சிறுபான்மையினர் நலன் காக்கவும், சமூக நல்லிணக்கம் மேலோங்கவும், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகளின் அரணாக தி.மு.க., அரசு உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உடல், மனம் சார்ந்த மறுவாழ்வு சேவைகளுக்காக, விழுதுகள் என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

மக்களின் நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு பெருங்குடி, துரைப்பாக்கம், செம்மொழி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.

தொகுதி மேம்பாட்டு நிதியில், பாலவாக்கத்தில் 55 லட்சம் ரூபாயில் பல்நோக்கு கட்டடம்; மேடவாக்கத்தில் 2.10 கோடி ரூபாயில் சமூதாய நலக்கூடம், பூங்கா, பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேங்கைவாசல், கோவிலம்பாக்கத்தில் ஜிம், காரிய மண்டபம், ரேஷன் கடைகள், பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளன. கல்வி கட்டமைப்புகளுக்காக அதிக நிதி ஒதுக்கி உள்ளேன். வெள்ள பாதிப்பை தடுக்க, 165 கோடி ரூபாயில் மூடு கால்வாய் கட்டப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மதியழகன், வெங்கடேசன், சங்கீதா, மனோகரன், ஏழுமலை, அரிகிருஷ்ணன், பார்த்திபன், பாண்டியன், சிவபூசணம், மோகன பிரியா, கல்பனா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us