/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆன்லைன் மோசடியில் மீட்ட ரூ.31.67 லட்சம் ஒப்படைப்பு
/
ஆன்லைன் மோசடியில் மீட்ட ரூ.31.67 லட்சம் ஒப்படைப்பு
ஆன்லைன் மோசடியில் மீட்ட ரூ.31.67 லட்சம் ஒப்படைப்பு
ஆன்லைன் மோசடியில் மீட்ட ரூ.31.67 லட்சம் ஒப்படைப்பு
ADDED : நவ 07, 2024 12:30 AM

ஆவடி, ந-
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பங்குச்சந்தை மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பு தொடர்பான,'ஆன்லைன்' மோசடியில் ஈடுபடுவோர் மீது, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், செப்., மற்றும் அக்., மாதங்களில் பங்குச் சந்தை, பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற பெயரில், 11 பேரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் செலுத்திய வங்கி பரிவர்த்தனைகளை கொண்டு, சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளுக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
பின், மோசடி நபர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மீட்டு, மொத்தம் 31.67 லட்சம் ரூபாய், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஆவடி போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில், அதற்கான சான்றிதழ்களை, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், உரியவர்களிடம் நேற்று வழங்கினார்.
தொடர்ந்து, குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து 34 மனுக்களை நேரடியாக பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.