/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காட்சிப்பொருளான கண்காணிப்பு கேமராக்கள்
/
காட்சிப்பொருளான கண்காணிப்பு கேமராக்கள்
ADDED : ஜூன் 02, 2025 03:06 AM

வில்லிவாக்கம்:குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியவும், விபத்து ஏற்படுத்திச் செல்லும் வாகனங்களை அடையாளம் காணும் வகையில் சென்னை முழுதும் கண்காணிப்பு 'கேமரா'க்கள் பொருத்தப்பட்டன.
அவை முறையாக பராமரிக்கப்படாமல், பல இடங்களில், பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.
அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில், வில்லிவாக்கம் சிட்கோ நகர் உள்ளது. இங்குள்ள நான்காவது பிரதான சாலையின் நான்கு முனை சந்திப்பில் கேமராக்கள் உள்ளன. அவை பல மாதங்களாக உடைந்து தொங்கியபடி உள்ளன.
அதேபோல், தெற்கு ஜெகன்நாத நகர் இரண்டாது பிரதான சாலையிலும் கேமரா இல்லாத கம்பங்கள் சாலையில் சாய்ந்து கேட்பாரற்று கிடக்கின்றன. இப்பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட காவல் து றையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.